பால் வியாபாரி குடும்பத்தினரை தாக்கி நகை, பணம் கொள்ளை 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் துணிகரம்
தண்டராம்பட்டு அருகே நள்ளிரவில் 7 பேர் கொண்ட முகமூடிகும்பல், வீடுபுகுந்து பால் வியாபாரி குடும்பத்தினரை தாக்கி 15 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 34). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (30). இவர்களுக்கு தபுஸ்ரீ (10) என்ற மகளும், தர்ஷன் (8) என்ற மகளும் உள்ளனர். பால் வியாபாரி ராஜா திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி சாலையில் தனியாக வீடு கட்டி வசித்து வருகிறார்.
ராஜா சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்துள்ளார். எனவே நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு தனியறையில் தூங்கியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் ஹாலில் தூங்கி உள்ளனர்.
முகமூடி கும்பல்
நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே ராஜா ஜன்னல் வழியாக பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்துகொண்டு வீட்டின் கதவை உடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தனது குழந்தைகளை கட்டிலுக்கு அடியில் பதுங்க வைத்துவிட்டு, அரிவாள் மனையை எடுத்துக்கொண்டு கதவருகே ராஜா தயாராக காத்திருந்தார். அப்போது மனைவி அனிதா சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து ஜன்னல் வழியாக வீசியுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து இருந்ததால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நகை-பணம் கொள்ளை
கொள்ளையர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவுடன் ராஜா தனது கையிலிருந்த அரிவாள்மனையால் ஒருவனை தாக்கியுள்ளார். அதில் அவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்
பின்னர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தை கேட்டுள்ளனர். உயிருக்கு பயந்த அனிதா தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயின், கம்மல், கால்கொலுசு உள்பட பீரோவில் இருந்த மொத்தம் 15 பவுன் நகையை கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் 400 கிராம் வெள்ளி, ரூ.25 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார்
நகை- பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல், ராஜா உள்பட 4 பேரையும் ஒரு தனி அறையில் வைத்து அடைத்து விட்டு, வீடு முழுவதும் தடையங்களை அழிப்பதற்காக மிளகாய்பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளனர். பின்னர் ராஜா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து 4 பேரையும் மீட்டு உள்ளனர்
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, துணைபோலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துணைபோலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மோப்ப நாய் மியான் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. பால்வியாபாரி குடுமபத்தினரை 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story