திண்டிவனம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
திண்டிவனம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
திண்டிவனம்,
திண்டிவனம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கீழ்பேரடிக்குப்பத்தில் உள்ள ஏரி நிரம்பியது. இந்த நிலையில் ஏரிக்கரை திடீரென உடைந்து, கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கீழ் எடையாளம் அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தாசில்தார் செல்வம் மற்றும் அலுவலர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிலையில் உடைப்பு ஏற்பட்ட ஏரியின் கரையை பொதுப்பணித்துறையினர் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏரிக்கரை உடைந்த பகுதியை துரிதமாகவும் விரைந்து முடிக்கவும், அங்கிருந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார்.
நிவாரண உதவி
இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், பொதுப்பணித்துறை பொறியாளர் கனகராஜ், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் தீபம் குமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோவடி தனுசு, குன்னப்பாக்கம் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜி, ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமலிங்கம், மாணவரணி செயலாளர் குமரவேல், இணைச்செயலாளர் கோமதி யுவராஜா, ஜெயலலிதா பேரவை தலைவர் நரேந்திர பிரபு, மாவட்ட பிரதிநிதிகள் முருகன், மாணிக்கம், இளைஞர் பாசறை செயலாளர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கனகவல்லி, விவசாய அணி செயலாளர் ஆதிபகவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story