மராட்டியத்தில் பா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் பட்னாவிஸ் சொல்கிறார்
மராட்டியத்தில் பா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரான மந்திரி ஜெயந்த் பாட்டீல் சமீபத்தில் பா.ஜனதாவில் 10 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்தநிலையில் நாசிக் முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ. பாலாசாகிப் சனப் பா.ஜனதாவில் இணைந்தார். அந்த நிகழ்ச்சியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஜெயந்த் பாட்டீலின் கருத்துக்கு பதில் அளித்து பேசியதாவது:-
மகாவிகாஸ் அகாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது, அதில் உள்ள கட்சிகளின் அரசியல் களத்தை குறைத்துவிடும். இது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும்.
ஓரங்கப்பட்ட மத்திய பிரதேசம், கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா விரிவடைந்து ஆட்சியை பிடித்தது. மராட்டியத்தில் மற்ற அரசியல் கட்சிகள் நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் பெரிய அளவில் வளர வாய்ப்பை கொடுத்து உள்ளன. நாங்கள் தனித்து ஆட்சியை பிடிப்போம். பல தலைவர்கள் பிற கட்சிகளில் இருந்து பா.ஜனதாவில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story