முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியது கருத்து பரிமாற்றம் தான் பாலசாகேப் தோரட் விளக்கம்
உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியது கருத்து பரிமாற்றம் தான் என மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் கூறியுள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள தலித், பழங்குடியின மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொண்டு இருந்தார்.
இந்தநிலையில் அதிருப்தி காரணமாகவே சோனியா காந்தி, உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. எனினும் அதை மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலா சாகேப் தோரட் மறுத்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர்களை முதல்-மந்திரி வர்ஷா பங்களாவில் சந்தித்தார். அப்போது அவர்கள் சோனியா காந்தி எழுதிய கடிதத்தை முதல்-மந்திரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பாலசாகேப் தோரட் இதுகுறித்து கூறும்போது, "மகாவிகாஸ் கூட்டணி பலமாக உள்ளது. ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
சோனியா காந்தி முதல் முறையாக முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சரத்பவார் தேசியவாத காங்கிரசை வழிநடத்துவது போல, சோனியா காந்தி எங்களை வழிநடத்துகிறார். அவரது கடிதம் கருத்து பரிமாற்றம் தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர் நேரில் சந்தித்து பேசுவதற்கு பதிலாக, கடிதத்தை பகிர்ந்து உள்ளார்" என்றார்.
Related Tags :
Next Story