சங்கரன்கோவிலுக்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்; அமைச்சர் ராஜலட்சுமி அறிக்கை


அமைச்சர் ராஜலட்சுமி
x
அமைச்சர் ராஜலட்சுமி
தினத்தந்தி 22 Dec 2020 6:22 AM IST (Updated: 22 Dec 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலட்சுமியின் மகள் ஹரிணி மற்றும் மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நன்னீராட்டு விழா சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் உள்ள ஏஞ்சல் பள்ளி மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்று, அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார். அவருக்கு நெல்லை கே.டி.சி. நகரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. குமரி மாவட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு நெல்லை வரும் முதல்-அமைச்சர் நெல்லையில் தங்குகிறார். பின்னர் நாளை (புதன்கிழமை) எனது இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக, காலை சங்கரன்கோவிலுக்கு வருகை தருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் பின்னர் தூத்துக்குடிக்கு சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் இல்ல நிகழ்வில் கலந்து கொள்வது போல் கலந்து கொண்டு முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story