தர்மபுரியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


தர்மபுரியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 8:39 AM IST (Updated: 22 Dec 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. திட்ட செயலாளர் சக்திவேல், சி.ஐ.டி.யு.. திட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநிலத்தலைவர் முருகன், கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆறுமுகம், மாரிமுத்து, மாதேஷ், சேக்கிலார், கோகுல்தாஸ், தேவராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் மின்வாரிய தொழிலாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணி நிரந்தரம்

மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஐ.டி.ஐ. படித்தவர்களை மட்டுமே புதிய பணியிடங்களில் நியமிக்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மின் வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story