தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து மின்சார ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் தங்களின் பணிகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். மின்வாரிய பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் பேரை உடனடியாக பணியில் அமர்த்த வலியுறுத்தியும், வெளியாட்கள் மூலம் மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story