மாவட்ட செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில் சின்னசேலத்துக்கு 57 ஆயிரம் அரிசி மூட்டைகள் வந்தன + "||" + 57,000 bundles of rice arrived at Chinnasalem by freight train from Telangana

தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில் சின்னசேலத்துக்கு 57 ஆயிரம் அரிசி மூட்டைகள் வந்தன

தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில் சின்னசேலத்துக்கு 57 ஆயிரம் அரிசி மூட்டைகள் வந்தன
தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியிலிருந்து 47 சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் 2ஆயிரத்தி 800 டன் எடையுள்ள 57 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.
சின்னசேலம்,

தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியிலிருந்து 47 சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் 2ஆயிரத்தி 800 டன் எடையுள்ள 57 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் சின்னசேலம்-கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது. இந்த பணிகளை சின்னசேலம் கிடங்கு மேலாளர் பிரபு, துணை கிடங்கு மேலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய உணவுக் கழக மேலாளர் சகாதேவன், தர ஆய்வு உதவியாளர் திருநீலகண்டன், இளநிலை உதவியாளர் சுவீட் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு நகரங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வாய்ப்பு
தென்னக ெரயில்வே நிர்வாகம் விருதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப வசதி செய்து உள்ளதாக ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2. சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேர் பயணம் கொரோனாவுக்கு பிறகு சாதனை
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட தினம் அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் 1.40 லட்சம் பேர் இலவச பயணம் செய்தனர்.
3. திருவாரூரில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
4. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்
சென்னையில் வண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
5. தஞ்சையில் இருந்து செங்கல்பட்டுக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.