கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 22 Dec 2020 11:33 AM IST (Updated: 22 Dec 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். பொருளாளர் மார்த்தாண்டன், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ரெஜிஸ்குமார் கண்டன உரையாற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டும் தரமான சிகிச்சை அளிக்காததை கண்டித்தும், பிரசவ வார்டை விரிவாக்கம் செய்து கூடுதல் படுக்கை வசதி செய்து தரவேண்டும், கழிவறை வசதி செய்து தரவேண்டும், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், கூடுதலாக லேப் டெக்னீஷியன்களை நியமனம் செய்ய வேண்டும், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், எலும்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story