கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 11:37 AM IST (Updated: 22 Dec 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பபெறக்கோரிக்கை.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தி.மு.க. செயலாளர் சுப்பராயலு தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அமிர்தவள்ளி, நகர மகளிர் அணி நிர்வாகி பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் காமராஜ், கென்னடி, லியாகத்அலி, சண்முகம், இலக்கிய அணி நிர்வாகி பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சர்புதீன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Next Story