மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கடலூரில், மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கடலூரில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கடலூர் முதுநகர்,
மின்வாரியத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் கடலூர் கேப்பர் மலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சி..ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில துணைபபொதுச் செயலாளர் வேல்முருகன், சம்மேளன மாவட்ட செயலாளர் ஆர்.ரவிசங்கர், ஐ.என்.டி.யு.சி. மாநில துணை செயலாளர் கே.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷம்
இதில் மின்வாரியத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் டி.ரவிச்சந்திரன், அம்பேத்கர் விடுதலை முன்னணி மாநில அமைப்பு செயலாளர் பி.ஜெயபிரகாஷ், பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் பி. சத்தியநாராயணன், பொறியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ராமலிங்கம், தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் டி.சேகர், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்ராமன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் என்.தேசிங்கு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story