‘அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவில்லை’ பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவில்லை என்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றிபெற போவது உறுதி. அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்.
முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?
நமது கூட்டணி கட்சி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று இன்னும் சொல்லமுடியவில்லை. ஏனெனில் தமிழக பா.ஜனதா தலைவர் முருகன், முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா தான் முடிவு செய்யும் என்று கூறுகிறார். இதன் மூலம், இந்த கூட்டணியில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று தெளிவாக கூற முடியவில்லை.
இந்த ஆட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அனைத்திலும் ஊழல் நிறைந்துவிட்டது. கொரோனா கூட இந்த ஆட்சியை கண்டு பயந்து ஓடிவிட்டது. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, தமிழகத்தில் கேடுவிளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டது ஆளும் அ.தி.மு.க. அரசு. இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில், துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்றைய பிரசார பயணத்தின் போது, கடலூர் உழவர் சந்தைக்கு சென்ற அவர், அங்கு வியாபாரம் செய்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேற்கு ராமாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று பேசினார். அதையடுத்து பரங்கிப்பேட்டை, கிள்ளை, சிதம்பரம் பகுதியிலும் பொதுமக்கள், மீனவர்கள், முஸ்லிம்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும், கடலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Related Tags :
Next Story