சிந்துதுர்க் விமான நிலையத்தில் அடுத்த மாதம் விமான சேவை தொடங்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


சிந்துதுர்க் விமான நிலையத்தில் அடுத்த மாதம் விமான சேவை தொடங்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2020 10:58 PM GMT (Updated: 22 Dec 2020 10:58 PM GMT)

சிந்துதுர்க் விமான நிலையத்தில் அடுத்த மாதம் விமான சேவை தொடங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை,

சிந்துதுர்க் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விமான சேவைகளை இயக்க கடந்த 2019-ம் ஆண்டு மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து கடந்த மே 1-ந் தேதி முதல் சிந்துதுர்க் விமான நிலையத்தில் விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக அங்கு விமான சேவை தொடங்கப்படாமல் உள்ளது.

இந்தநிலையில் அடுத்த மாதம் சிந்துதுர்க் விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் இருந்து சேவையை தொடங்குவதற்கான பல கருவிகளை கொண்டு வர முடியாமல் போனது. எனினும் ஜனவரி (அடுத்த மாதம்) முதல் விமான சேவையை தொடங்க உள்ளோம் " என்றார்.

Next Story