மும்பையில் குளிரின் தாக்கம் அதிகாிப்பு
மும்பையில் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து குறைந்த வெப்பநிலையே நிலவி வருகிறது. மேலும் அரபிக்கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக ஒரு சில நாட்கள் லேசான மழையும் பெய்தது. இந்தநிலையில் நேற்று மும்பையில் வெப்பநிலை வழக்கத்தைவிட குறைந்தது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக அதிகாலை, இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருந்தது. இதனால் இரவு வேலை செல்பவர்கள் அவதி அடைந்தனர்.
சாலையோரம் வசிக்கும் மக்கள் தீமூட்டி குளிர்காய்ந்து கொண்டனர். நேற்று மும்பை புறநகரில் 16 டிகிரி குறைந்தப்பட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதை வழக்கத்தைவிட 2 டிகிரி குறைவு ஆகும்.
இதேபோல நகரில் 20 டிகிாி குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் குளிாின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story