குடவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு


குடவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
x

குடவாசல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு செய்தார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுககுடி, செருகுடி ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செருகுடி ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள், தூய்மை பாரத திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

செருகுடி ஊராட்சியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

குறிப்பிட்ட காலத்துக்குள்...

அதேபோல் அங்கு நடைபெற்று வரும் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிட கட்டுமான பணியையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கூடுதல் கலெக்டர், அதிகாரிகளிடம் கூறுகையில், ‘குறிப்பிட்ட காலத்துக்குள் வளர்ச்சி திட்ட பணிகளை முடிக்க வேண்டும்’ என்றார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகம், சுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், பணி மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story