நாகையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்


நாகையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2020 7:22 AM IST (Updated: 23 Dec 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகப்பட்டினம்,

நாகை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆா்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. கிளை துணைத் தலைவர் பஞ்சநாதன், ஏ.ஐ.டியூ.சி. கிளை தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ேபாக்குவரத்து ெதாழிலாளா்கள் கலந்து ெகாண்டனா்.

பணப்பலன்கள்

சம்பள உயா்வை பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். வரவுக்கும், செலவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அரசு உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ேகாஷங்கள் எழுப்பப்பட்டன.

ேவதாரண்யம்

வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ேபாக்குவரத்து ெதாழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் ஹரிகிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்செழியன், ஐ.என்.டி.யூ.சி சங்கத்தை ேசா்ந்த செல்வராஜ், அன்பழகன், ஓய்வு ெபற்ற பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஞானசேகரன், குழந்தைவேல் உள்பட 100-க்கும் ேமற்பட்ேடாா் கலந்து ெகாண்டு ேகாரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story