கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் கும்மியடித்து ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் கும்மியடித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2020 8:56 AM IST (Updated: 23 Dec 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தென்காசி மாவட்ட குழு சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி,

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தென்காசி மாவட்ட குழு சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு கியாஸ் சிலிண்டரை தரையில் வைத்து அதனை சுற்றி சில பெண்கள் கும்மியடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆயிஷா பேகம் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில குழு உறுப்பினர்கள் கணபதி, வேலுமயில், சி.ஐ.டி.யு. குணசீலன், மாரியப்பன், லெனின், அயூப்கான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்க துணைச் செயலாளர் மேனகா, நிர்வாகிகள் புஷ்பா, சங்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story