தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்


தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2020 9:52 AM IST (Updated: 23 Dec 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் வளையம் வைக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 47-வது வார்டு லெவிஞ்சிபுரம் 1-வது தெருவில் மன்னாரைய்யர் காலனியில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும். தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்ற வேண்டும். நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் வளையம் வைக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, மாரியப்பன், முத்துகிருஷ்ணன், காஸ்ட்ரோ, வினோ, மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story