புதிதாக பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 54 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி பயிற்சியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54 கிராம நிர்வாக அலுவலர்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். மாவட்ட வருவாய் அலகில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 54 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி மற்றும் சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு 3 நாட்கள் கணினி பயிற்சியை எல்காட் நிறுவனம் வழங்குகிறது.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படுகிது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.
சான்றிதழ்கள்
இந்த பயிற்சியின் போது மடிக்கணினியை இயக்குவது, சிட்டா, பட்டா, அரசு சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், எல்காட் நிறுவன அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story