நாமக்கல், திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
நாமக்கல், திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று தொடர் முழக்க போராட்டத்தை நடத்தினர்.
நாமக்கல்,
அரசு பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும், பணி கிடைக்காமல் திரும்பும் தொழிலாளர்களுக்கு வருகைபதிவு வழங்கிட வேண்டும், ஓய்வுபெற்றோர் அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத்துறை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்த கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பணிமனை முன்பு தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
நிர்வாகத்தை கண்டித்து...
இந்த போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் செல்வன், தியாகராஜன், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் சுப்பிரமணியன், வரதராஜன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிசாமி, கருப்பண்ணன், சின்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலையில் கொரோனா கால கட்டத்தில் தொழிலாளர்களின் சொந்த விடுப்பை அளிக்க மறுப்பதாக கூறி அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து பாரதீய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story