வேலாயுதம்பாளையம் அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது
ேவலாயுதம்பாளையம் அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நொய்யல்,
திருச்சி அண்ணாநகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 27). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 17-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் ரஞ்சித்குமாரை வழிமறித்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த கொலை தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் ஏற்கனவே 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலைக்கு முக்கிய காரணமான 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
மேலும் 2 பேர் கைது
இந்நிலையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ரஞ்சித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்கிற கூல் மணி (24), சீனிவாசன் (21) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story