கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மந்தித்தோப்பு ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தல்


கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மந்தித்தோப்பு ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Dec 2020 9:59 AM IST (Updated: 24 Dec 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மந்தித்தோப்பு ரோட்டை புதுப்பிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு சந்திப்பில் உள்ள மங்கள விநாயகர் கோவில் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மந்தித்தோப்பு ரோட்டை விரிவுபடுத்தி சாலையை புதுப்பிக்க வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நடப்பாண்டில் பெரும் மழையினால் சேதமடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், 2019-2020ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், சமையல் கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு, ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டசெயலாளர் அழகுமுத்து பாண்டியன், துணைச் செயலாளர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, துணைச் செயலாளர் முனியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், கிளை செயலாளர்கள் குமாரபுரம் ஸ்ரீ ரெங்கநாதன், ஊத்துப்பட்டி சுரேஷ் குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story