தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஒன்றியம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியலை தரப்போறாரு' என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சமுத்திரம், நல்லவன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைவீதிகளுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. சென்று வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு தொப்பி, துண்டு பிரசுரம், பாக்கெட் நாள்காட்டி வழங்கி பிரச்சினைகளை கேட்டறிந்தார். அங்கு பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் பொதுமக்களுடன் இணைந்து அவர் கையொப்பமிட்டார்.
பின்னர் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதலாளிகளை வாழவைத்து, அத்தியாவசிய உணவு பதுக்கலுக்கு, விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பட்டினிசாவை உருவாக்கும். இதற்கு ஆதரவாக இருக்கும் எடப்பாடி அ.தி.மு.க. அரசை நிராகரிக்கிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி, தெள்ளாறு, பெரணமல்லூர் உள்ளிட்ட 13 ஊராட்சிகளிலும், வந்தவாசி நகரப்பகுதியில் 2 வார்டுகளிலும் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. தி.மு.க. மாவட்ட பொறுப்பளர் தரணிவேந்தன், அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். இஞ்சிமேடு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பதாகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். இந்த கிராம சபை கூட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் சி.ஆர்.பெருமாள். ஆதிகேசவன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் நகர தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திடலில் கிராம சபை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சி.கே.அன்பு தலைமை தாங்கினார். கூட்டத்தில், அ.தி.மு.க.வை புறக்கணிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், இளைஞர் அணியை சேர்ந்த வக்கீல் கண்ணதாசன் மற்றும் பலர் கலந்துகொண்டு தெருத்தெருவாக சென்று அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத கொள்கை குறித்து பிரசாரம் செய்தனர்.
இதில் நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சுந்தரமூர்த்தி, ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கருணாநிதி, இளைஞரணி அமைப்பாளர் பாக்கியராஜ் உள்பட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராசு நன்றி கூறினார்.
ஆரணியில் ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் 1, 2, 3 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதி தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நகர செயலாளர் ஏ.சி.மணி தலைமையில் நடந்தது. மாவட்ட பொறியாளர் அணி பிரிவு அமைப்பாளர் ஆர்.எஸ்.பாபு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சின்னக்குட்டி, குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
கண்ணமங்கலம் காலனியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நகர தி.மு.க. செயலாளர் கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கணேசன், அவைத்தலைவர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் குமார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி கலந்துகொண்டு பேசினார்.
இதில் முன்னாள் துணைத்தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் பிச்சைமுத்து, சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வேலு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story