காரைக்குடியில் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 503 பேருக்கு பரிசு கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்
காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் 503 பேருக்கு கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தை மீட்போம் என்ற இணையவழி காணொலி காட்சி மூலம் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. காரைக்குடி நகரில் 6 இடங்களிலும், சாக்கோட்டை கிழக்கு ஒன்றியத்தில் 3 இடங்களிலும்.சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் 4 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி பி.எல்.பி.பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 503 பேருக்கு ரூ.10 ஆயிரம், சான்றிதழ், கேடயம், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசை வழங்கப்பட்டது. இதை தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.ஆர். பெரியகருப்பன் தலைமை உரை நிகழ்த்தி பரிசுகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் வரவேற்புரை நிகழ்த்தினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இணையதள காணொலி காட்சி வாயிலாக சென்னையில் இருந்தபடி சிறப்பு உரை நிகழ்த்தினார்.
இதில் மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.ப. துரைராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூஸோ, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்து துரை, காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், நகர அவைத்தலைவர் இரா.கோ.அரசு, தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுரவத்தலைவர் வைரவன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் நடந்த தி.மு.க. சிறப்பு பொதுக்கூட்டத்தில் மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் அசோக், சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன், கோட்டையூர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இளையான்குடி, பெரும்பச்சேரி, கோட்டையூர், நாககுமுகுந்தன் ஆகிய 4 இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப.மதியரசன், நகர செயலாளர் நஜீமுதீன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், விராமதி, காரையூர், நெற்குப்பை, பிள்ளையார்பட்டி, தெக்கூர், கண்டவராயன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காணொலி காட்சி நடைபெற்றது. இதேபோல் சிங்கம்புணரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரிசேகர், நகர செயலாளர் யாகூப், அவைத்தலைவர் காந்திமதிசிவா, இளைஞரணி மனோகரன், பிரதிநிதி குடோன் மணி, பார்த்திபன், காளாப்பூர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story