தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்: அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்


தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்ற போது
x
தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்ற போது
தினத்தந்தி 25 Dec 2020 1:00 AM IST (Updated: 24 Dec 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

மவுன ஊர்வலம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம் டூவிபுரத்தில் இருந்து புறப்பட்டு, பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

யார்-யார்?
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிரு‌‌ஷ்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் இரா.சுதாகர், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், ஆழ்வார்திருநகரி முன்னாள் யூனியன் தலைவர் விஜயகுமார், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவப்படங்களுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் மணி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலைக்கு மரியாதை
அ.தி.மு.க. மாநில அமைப்புசெயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் அழகிரிசாமி, தலைவர் பால்பாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story