தூத்துக்குடி மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான தனித்திறன் போட்டிகள்; 29-ந் தேதி நடக்கிறது


இளைஞர்களுக்கான தனித்திறன் போட்டிகள்
x
இளைஞர்களுக்கான தனித்திறன் போட்டிகள்
தினத்தந்தி 25 Dec 2020 1:15 AM IST (Updated: 25 Dec 2020 12:19 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான தனித்திறன் போட்டிகள் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தனித்திறன் போட்டிகள்
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகிறது. அப்போது இளைஞர்களுக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் போட்டிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. முதலில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டிகள், கலெக்டர் கி.செந்தில்ராஜ் மேற்பார்வையில் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இதில் இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்து ஆற்றல், பாரம்பரிய விளையாட்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் 15 முதல் 29 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த போட்டிகளில், பங்கேற்பவர்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவை தெளிவான ஒளி, ஒலி அமைப்புடன் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோவை உறுதிமொழி படிவத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு dsotuti@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளின் முடிவுகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 74017 03508, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் 94886 66948 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story