மாவட்ட செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா + "||" + Corona for 33 new people in Nellai, Thoothukudi and Tenkasi

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி தென்காசியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை யூனியன், மானூர், களக்காடு, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் ெகாரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15, 205 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 14,866 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 211 பேர் இறந்துள்ளனர் தற்போது அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கீழப்பாவூர் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். தென்காசி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8,233 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 158 பேர் உயிரிழந்துள்ளனர் நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 8,023 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 998 ஆக உள்ளது. இதில் 15 ஆயிரத்து 770 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 87 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.82 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 51 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 51 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிய வகை வைரசும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவுரங்காபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
4. ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.77 கோடியாக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை