ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது; த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேட்டி
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது தி.மு.க.வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்; த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க .அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் கொடுத்துள்ளார். உண்மையில் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்தவித தார்மீக தகுதியும் கிடையாது. ஏனெனில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் எங்களது கூட்டணி தொடரும். தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து விட்டது. எனவே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது தி.மு.க.வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அவர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story