தொலைதூர கல்வி மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு; புதுவை பல்கலைக்கழகம் ஏற்பாடு


புதுவை பல்கலைக்கழகம்
x
புதுவை பல்கலைக்கழகம்
தினத்தந்தி 25 Dec 2020 2:48 AM IST (Updated: 25 Dec 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத புதுவை பல்கலைக்கழகம் வாய்ப்பு அளித்துள்ளது.

புதுவை பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் தேர்வுகள்
புதுவை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் படித்து படிப்பினை முடிக்காத மாணவர்களுக்கு துணைவேந்தர் 2 சிறப்பு வாய்ப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி ஆன்லைன் மூலம் ஜனவரி 18-ந்தேதி முதல் பிப்ரவரி 23-ந்தேதி வரை வேலைநாட்களில் தேர்வுகள் நடைபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிக்கலாம்
அனைத்து எம்.பி.ஏ. மாணவர்கள் (2005-06), மற்றும் 2014-15 முதல் 2016-ம் ஆண்டு எம்.காம், எம்.ஏ. (ஆங்கிலம், சமூகவியல், இந்தி) பிரிவு மாணவர்கள் தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது ஜனவரி மாதத்திலும், ஜூன் மாதத்திலும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு பல்கலைக்கழக இணையதள முகவரியில் மீண்டும் பதிவு செய்யவேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஏற்கனவே 2-வது மற்றும் 4-வது செமஸ்டர் அரியர் பேப்பர் மற்றும் முதலாவது 3-வது செமஸ்டர் தேர்வு எழுதுபவர்களும் ஜனவரி மாதம் நடக்கும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூன் மாதம் நடக்கும் தேர்தல் குறித்த விவரங்கள் மே மாதம் வெளியிடப்படும். பல்கலைக்கழக இணையதள அறிவிப்புகளை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பாடங்கள் பதிவேற்றம்
கடந்த 2 மாதங்களாக தொலைதூர கல்வி இயக்கம் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. நிறைய மாணவர்கள் இதில் பங்குபெற்றுள்ளனர். இந்த வகுப்புகளில் இடம்பெறாதவர்கள் பாடங்களை கவனிக்க வசதியாக அதுகுறித்த வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story