மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவது எப்படி? சிவகங்கை மாவட்ட கலெக்டர் தகவல்


சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி
x
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி
தினத்தந்தி 25 Dec 2020 4:51 AM IST (Updated: 25 Dec 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவது எப்படி? என கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்திற்கொண்டு அரசு பலவகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக செல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் மற்றும் இதர அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைபடுவதால், அட்டை பெறாத மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் அந்ததந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

மருத்துவ முகாம் 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29-ந் தேதி வரை நடக்கிறது.

இதன்படி வருகிற 30-ந்தேதி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அடுத்த மாதம் 5-ந்தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 6-ந்தேதி திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 7-ந்தேதி இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8-ந்தேதி தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19-ந்தேதி கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 20-ந்தேதி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு மருத்துவமுகாம் நடக்கிறது.

மருத்துவ முகாம்
இதே போல 21-ந்தேதி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 22-ந்தேதி எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27-ந்தேதி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 28-ந்தேதி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29-ந்தேதி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவ முகாம் காலை 10 மணியில் இருந்து பகல் 1 மணி வரை நடக்கிறது.

எனவே தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் நாளில் பாஸ் போர்ட் அளவு புகைப்படம்-4, மற்றும் ஆதார் கார்டு நகல், மற்றும் குடும்ப அட்டை நகலுடன், கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

இத்தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Next Story