அரியலூர், பெரம்பலூரில் உள்ள கோவில்களில் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்
அரியலூர், பெரம்பலூரில் உள்ள கோவில்களில் நேற்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்கள் காட்சி அளித்தார்.
பெரம்பலூரில்,
அரியலூர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. கொரோனா தோற்று பரவலை தடுக்கும் விதமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இருந்தபோதும் காலை 8 மணிக்கு மேல் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் முக கவசம் அணிந்து தசாவதார மண்டபத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதனகோபால சுவாமி கோவில்
இதேபோல் பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு நடக்கிறது. சொர்க்கவாசல் திறந்த பிறகு நம்பெருமாள், ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து சொர்க்கவாசல் வழியே மீண்டும் கோலிலை அடைகிறார். முன் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, முக கவசத்துடன் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி நேற்று காலையில் திருமஞ்சன உற்சவமும், இரவு ெபருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த நிகழ்ச்சியும், சிறப்பு ஆராதனையும், பெருமாள் பிரகார உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி
அரியலூர் மாவட்டத்தில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 முதல் 6 மணி வரை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. பின்னர் சாமி உற்சவம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5.30 மணியளவில் தீபாராதனை நடைபெற உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசத்துடன் வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Tags :
Next Story