குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்த போது
x
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்த போது
தினத்தந்தி 25 Dec 2020 1:15 AM GMT (Updated: 25 Dec 2020 1:15 AM GMT)

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஆயர் பங்கேற்பு
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு ஊர்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து கிறிஸ்துமஸ்சை வரவேற்றனர். கிறிஸ்துமஸ் பிறப்பையொட்டி மக்கள் நள்ளிரவில் பிரார்த்தனைக்காக ஆலயங்களுக்கு சென்றதால் பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பிரார்த்தனை நடக்கிறது.

Next Story