நகைக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளிக்கொடி-பணம் திருட்டு
நகைக்கடையின் பூட்டை உடைத்து வெள்ளிக்கொடி-பணம் திருட்டு.
தோகைமலை,
திருச்சி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது( 43). இவர் கரூர் மாவட்டம், தோகைமலை அருேக உள்ள காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் அவர் வைத்திருந்த பழைய வெள்ளிக்கொடி, ரூ.3 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த எல்.இ.டி.டிவி. ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி ெசன்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நாய் கடையில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் சென்று படுத்தும் கொண்டது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் நகைகடையில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story