வன்நாடு, கோம்பை ஊராட்சிகளில் நீரூற்றால் 5 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி கிழங்கு அழுகியது


வன்நாடு, கோம்பை ஊராட்சிகளில் நீரூற்றால் 5 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி கிழங்கு அழுகியது
x
தினத்தந்தி 25 Dec 2020 7:48 AM IST (Updated: 25 Dec 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

வன்நாடு, கோம்பை ஊராட்சிகளில் நீரூற்றால் 5 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி கிழங்கு அழுகியது அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

துறையூர்,

துறையூரை அடுத்த பச்சமலையில் வன்நாடு, கோம்பை ஊராட்சிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக மலைப்பகுதி என்பதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் புயலாலும், காலநிலை மாற்றத்தாலும் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் மலை குன்றுகள் மற்றும் அருவிகளிலும் அதிக அளவில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. மலைகளில் உள்ள கிணறுகளில் நீர் வழிந்து ஓடியது. நிலத்தில் நீர் ஊற்று எடுத்து ஓடியதால், விவசாய நிலங்களிலும் நீர் ஊற்று எடுத்தது. இதன்காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு அடியோடு அழுகியது. இதுபோல் வெங்காயமும் சேதமடைந்தது. இதனால் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story