வளநாடு அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


வளநாடு அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 25 Dec 2020 7:54 AM IST (Updated: 25 Dec 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

வளநாடு அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஹாஸ்பிடல் மேடு பகுதியில் உள்ள கணேசன் என்பவரின் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவருடன் இடையபட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சின்னச்சாமி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சின்னச்சாமி வீட்டிற்கு சென்று உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வளநாடு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story