அலிவலம் சமத்துவபுரத்தில் இடிந்து விழும் அபாயத்தில் வீடுகள் அச்சத்துடன் வசிக்கும் மக்கள்
திருவாரூர் அருகே அலிவலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகிறார்கள்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள அலிவலத்தில் கடந்த 1997-ம் ஆண்டு 100 வீடுகளுடன் சமத்துவபுரம் கட்டப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இங்கு உள்ள வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலமாக வீடுகள் பழுது நீக்கம் செய்யப்பட்டது. சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டப்பட்டு 23 ஆண்டுகளாகி விட்ட நிலையில் வீடுகள் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காட்சி தருகின்றன.
அச்சத்தில் மக்கள்
பல வீடுகளின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் வீடுகள் இடிந்து விழலாம் என்ற அபாய சூழலில் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகிறார்கள்.
குழந்தைகளுடன் வீடுகளில் வசிப்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. சிலர் வீடுகளில் குடியிருக்க பயந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு வீடுகளுக்கு மாறி விட்டனர். அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விழுவதால், வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தூங்க முடியவில்லை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘அலிவலத்தில் சமத்துவபுரம் கட்டி 23 ஆண்டுகள் ஆகிறது. இந்த வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. வீட்டை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு செல்லும் நிலையில் இருக்கிறோம்.
அதேபோல அலிவலம் கடைவீதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சமத்துபுரத்துக்கு கழிவுநீர் வடிகால் வசதிக்காக அருகில் இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த சமுத்துவபுரத்தில் நூலகம், அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை உள்ள நிலையில் அனைத்து கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில் தான் காணப்படுகிறது.
கடன் வசதி
குறிப்பாக இந்த வீடுகள் அனைத்தும் கூட்டுபட்டாவாக இருக்கிறது. குடியிருக்கும் பயனாளிகள் தனிப்பட்டா இல்லாததால் வீடுகளை பரமரிப்பு செய்ய எந்தவித கடன் வசதியும் பெற முடியாத நிலையில் உள்ளோம்’ என்றனர்.

Related Tags :
Next Story