மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு + "||" + M.G.R. Evening parade for ADMK, ADMK for the statue

எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு
கடலூரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர்,

கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் குமரன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். இதில் முன்னாள் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் கெமிக்கல் மாதவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜே.கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் வக்கீல் பாலகிரு‌‌ஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

தொடர்ந்து கடலூர் நகர அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, முதுநகர் மணிக்கூண்டு, வண்ணாரப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில வக்கீல் பிரிவு செயலாளர் சத்தியராஜ், மாவட்ட துணை செயலாளர் சேகர், சார்பு அணி செயலாளர்கள் ராஜலட்சுமி, ஆனந்தன், அருள்ஜோதி, ராஜே‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் பாடலீஸ்வரன், நிர்வாகிகள் கண்ணன், அருண், ஆனந்தி, நித்யா, ஷேக், அக்பர்பா‌ஷா மற்றும் ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.

கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் காராமணிக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி ஆதி நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் குமுதம் சேகர், மகேஸ்வரி விஜயராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத்குமார், இணைச் செயலாளர் ராஜேந்திரன், பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.

கடலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நல்லாதூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வ பக்கிரி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெயகாந்தன், மதிவாணன், செல்வ அழகானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கல்யாணி ரமேஷ், தமிழ்செல்வி ஆதிநாராயணன், ஒன்றிய குழு கவுன்சிலர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், முருகன், மாறன், சிவகுமார், ரவி, சிவக்குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் ராபர்ட், தகவல் தொழில்நுட்பிரிவு ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு சார்பில் பிறந்த நாள் விழா: ராணி வேலு நாச்சியார் உருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு
சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3. தஞ்சையில், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
4. நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
5. திருச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.