எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பெரியண்ணன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் குருநாதன், பழனிசாமி, தகடூர் விஜயன், சுமதி, மோகன், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின் அருள்சாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி நகர அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி காமாட்சி அம்மன் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், பேரவை நகர செயலாளர் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வேலாயுதம், கோகுல், குமரேசன், மாதேஸ்வரி, நந்தகுமார், முனியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தே.மு.தி.க. அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் விஜயகாந்த் மன்ற மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ரங்கநாதன், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் தேவதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, நிர்வாகிகள் சரவணன், ஸ்ரீதர உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம் பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் பஸ் நிலையத்தில் கடைபிடிக்கப்பட்டது. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சைத் அசேன், பேரூராட்சி செயலாளர் திம்மராயப்பா ஆகியோர் முன்னிலையில கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் துணைத்தலைவர் மஞ்சுநாத் நகர துணைத்தலைவர் தஸ்த்கீர் துணை செயலாளர் ராஜப்பா மனிவர் அணி தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
இதேபோல் ராயக்கோட்டை நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே கிழக்கு மாவட்ட பொருளாளர் சீனிவாசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள் தூருவாசன், நாராயணன், புருசப்பன், முனியப்பன், கோவிந்தன், கங்கம்மா அன்பரசு, கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story