மகாத்மா காந்தி பல் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு?
மகாத்மா காந்தி பல் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
புதுவை கோரிமேட்டில் மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 23 பேர் நேர்முக தேர்வில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலைமை செயலகத்தில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.இதன் முடிவில் 5 பேர் உதவி பேராசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் உத்தரவின்பேரில் கல்லூரி முதல்வர் கென்னடி பாபு அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் ரேடியாலாஜி பிரிவில் உதவி பேராசிரியராக டாக்டர் பரிமளா என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் முதலில் வெளியிடப்பட்ட நேர்முக தேர்வில் கலந்துகொள்வோர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. எனவே இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுதொடர்பாக கவர்னர் உடனடி நடவடிக்கை எடுத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் கவர்னர் கிரண்பெடிக்கு வக்கீல் சரவணன் புகார் அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story