நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவு நாள்
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி இளையான்குடியில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய கழகச்செயலாளர் பாரதிராஜன் ஏற்பாட்டின்படி மானாமதுரை சட்டமன்ற தொகுதி நாகராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சீமைச்சாமி, முன்னாள் கவுன்சிலர் செல்லம், தொழில்நுட்ப ஒன்றிய அணி வெற்றிவேல், சொசைட்டி தலைவர் துரைசிங்கம், இளைஞர் அணி முனீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன், பாசறை செயலாளர் செல்வகுமார், விமல்நாகராஜன், வடிவேல், தினகரன், வீரபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி சாணரேந்தல் விலக்கில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
இளையான்குடி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய சார்பில் செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் சாலைக்கிராமம் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்பு கண்ணதேவன்புலி கிராமத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரத்தினம், மாவட்ட பிரதிநிதிகள் சுகுமாரன், சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், உஷாராணிராஜா, மகாலட்சுமி பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கம், பாப்பா ராஜா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி, விவசாய அணி முன்னாள் கவுன்சிலர் மலைச்சாமி, வருந்திகுருசேகரன், நன்னியாவூர் பாலா, பரத்தவயல் நாகநாதன், சங்கர், துகவூர் முருகேசன், புதுக்கோட்டை ரத்தினகுமார், ராஜா, கரும்பு கூட்டம் குணசீலன், அமல்ராஜ், அருள், ராமசாமி, சண்முகம், மதுரைவீரன், பாஸ்கரன், பிச்சையாண்டி, பாத்திரக்கடை பாலா, முருகவேல், பூலாங்குடி பாலா, சுரேஷ், சங்கு, ராமகிருஷ்ணன், சரத்பாபு, பாண்டி, ராசகருப்பையா மற்றும் கிளை நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story