சேலம் மேற்கு தொகுதியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை
ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி குப்பாண்டியூருக்கு செல்ல பூலேரி வாய்க்காலின் குறுக்கே ரூ.26.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நடைபாலத்தை எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சிக்கு ஓமலூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து பாகல்பட்டி செங்கனூர் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ14 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாயும், ஒம்சக்தி நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல்லிக்கற்கள் சாலை அமைக்கவும், அதேபகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணியையும் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
முத்துநாயக்கன்பட்டி முனியப்பகவுண்டர் தெரு பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக், செம்மண் கூடல் ஊராட்சி எல்லாயூரில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணியையும் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் பூமிபூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஓமலூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் முருகன், நல்லாகவுண்டம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சின்னதுரை, பாகல்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் மணி, தோளூர் கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, பாகல்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் ஜெகதீஸ்வரன், கோட்டகவுண்டம்பட்டி தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவிந்திரநாத், செல்லபிள்ளைகுட்டை தலைவர் வெங்கடாஜலம், ஒப்பந்ததாரர்கள் ஜெகநாதன், திருமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யண்ணன், சர்க்கார் கொல்லப்பட்டி அம்மாசி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இரும்பாலை ஸ்ரீசேலம் ஓம்சக்தி நகரில் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்ற போது, ஓம்சக்தி குடியிருப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி கேட்டு வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அவர் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story