புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களை விற்க விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது - தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு


புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருட்களை விற்க விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது - தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 26 Dec 2020 6:31 AM IST (Updated: 26 Dec 2020 6:31 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க சுதந்திரம் கிடைத்துள்ளது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

புனே,

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று புனேயில் விவசாயிகள் மத்தியில் பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் புரட்சி மிகுந்தவை. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய அவர்களுக்கு இந்த சட்டங்கள் சுதந்திரம் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி எப்போதும் நாட்டின் விவசாயிகள் பக்கம் நிற்கிறார். எதிர்காலத்திலும் அது தொடரும்.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தையில் விற்கும்போது, அதற்காக போக்குவரத்து கட்டணம், தொழிலாளருக்கான கூலி, எடை போடும் கட்டணம் என பல செலவுகளை சந்திக்கிறார்கள். உதாரணமாக ரூ.15 ஆயிரத்துக்கான விளைபொருட்களை விற்க அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் செலவாகி விடுகிறது. இது அநீதி.

ஆனால் மராட்டியத்தில் செயல்பட்டு வரும் மகா விகாஸ் அகாடி அரசு விவசாயிகளை முட்டாளாக்கி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரியும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரியும் வாக்குறுதி அளித்தார்கள். அந்த வாக்குறுதி எங்கே போனது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story