மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேட்டி + "||" + Congress will contest in 3 assembly constituencies in Kumari district; Rajesh Kumar MLA Interview

குமரி மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேட்டி

குமரி மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேட்டி
3 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டி
மார்த்தாண்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பிரியங்கா காந்தியே போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றார்கள். காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கட்சி மேலிடத்தின் விருப்பபடி யாரை நிறுத்துகிறார்களோ அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சிறந்த நடிகர்கள். முன்பு எம்.ஜி.ஆர். நடிப்பு துறையில் இருந்து அரசியலில் வந்து வெற்றி பெற்றார் என்றால் அது அன்றைய சூழ்நிலையை பொருத்ததாகும். ஆனால் ரஜினிகாந்தும், கமலஹாசனும் வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கூட இல்லை.

தி.மு.க. கூட்டணி
தமிழ்நாட்டில் அரசியலில் மாற்றங்கள் வரவேண்டும் என்று சிலர் சொல்லுவது அ.தி.மு.க. ஆட்சியால் மக்கள் அலுத்துப் போய் விட்டார்கள் எனவே நிச்சயம் மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் நிச்சயம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும்.

கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தொகுதியிலும், சட்டசபை தொகுதிகள் மூன்று இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் 3 சட்டசபை தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்டு பெற்று போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியிட தயார்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன். அப்படி இல்லாவிட்டால் கட்சி யாரை தேர்ந்தெடுத்து வேட்பாளராக நிறுத்துகிறதோ அவர்களின் வெற்றிக்காக பாடு படுவோம் என்றார்.

கார் பரிசு
முன்னதாக வசந்த் அண்ட் கோ வின் மார்த்தாண்டம் கிளையில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன முதல் பரிசு அழகிய மண்டபம் துறவியர் சபையை சேர்ந்த ஒரு சகோதரிக்கு கிடைத்துள்ளது அவருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மார்த்தாண்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜய் வசந்த் ஆகியோர் இணைந்து காரை அருட் சகோதரிக்கு வழங்கினார்கள். இதில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: தென்மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; கண்காணிப்பு பணியில் 1000 போலீசாரை ஈடுபடுத்த முடிவு
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
3. குமரிக்கு இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தகவல்
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று குமரி மாவட்டத்திற்கு வர உள்ளதாக சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
4. குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்
அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். கிறிஸ்துமஸ் விழா மதநல்லிணக்க மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.