மத்திய அரசின் நெறிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்படும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
மத்திய அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் புதுச்சேரியில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதனால் அங்கு பெரும்பாலான விடுதிகளில் அறைகள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த மாநிலம் ஆகும். இங்கு மக்கள் புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடுவார்கள். மத ரீதியான பண்டிகைகளில் யாரும் தலையிட முடியாது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. புதுச்சேரியில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்க வேண்டும். மேலும் புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாடப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story