கயத்தாறு அருகே மருத்துவ கழிவுகளை கொட்டி சென்ற மர்மநபர்கள்
கயத்தாறு அருகே மருத்துவ கழிவுகளை மர்மநபர்கள் கொட்டி சென்று உள்ளனர்.
மருத்துவ கழிவுகள்
கயத்தாறு யூனியனை சேர்ந்த பணிக்கர்குளம் பஞ்சாயத்தில் அரசு மற்றும் தனியார் காற்றாலை பண்ணை பகுதி உள்ளது.
இங்கு இரண்டாம் புலிக்குளம் என்ற குளத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் மருத்துவ கழிவுகளை ெகாட்டி சென்று உள்ளனர்.
அந்த கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த நச்சுக்கழிவுகளில் மழைநீர் விழுந்து அந்த தண்ணீர் குளத்திற்கு சென்றால் அதை குடிக்கும் ஆடு, மாடுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே அதிகாரிகள் அந்த கழிவுகளை அங்கிருந்து உடனடியாக அகற்றுவதுடன் கழிவுகளை கொட்டி சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story