தனியார் மயத்தை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் அறிவிப்பு


தனியார் மயத்தை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 2:08 AM IST (Updated: 27 Dec 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பி.ஆர்.டி.சி. ஊழியர்கள்
புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) தனியார்மயத்தை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியார் மயமானால் சாலைப்போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 1000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இவர்களில் டிரைவர், கண்டக்டர் என 240 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் அல்லது தினக்கூலி ஊழியராக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் தொடர்ந்து வருவதால் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை.

காலவரையற்ற வேலைநிறுத்தம்
இந்தநிலையில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் அனைத்துப்பிரிவு ஊழியர்கள் (புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.ஆர்.டி.சி. தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Next Story