வி.களத்தூர் பகுதியில் பாசி படர்ந்த கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் நோய்த்தொற்று ஏற்படுமோ? என பொதுமக்கள் அச்சம்
வி.களத்தூர் பகுதியில் பாசி படர்ந்த கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் நோய்த்தொற்று ஏற்படுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த வி.களத்தூர் ஊராட்சியில் உள்ள மேட்டுச்சேரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அருகே உள்ள கிழக்கு ஏரியில் கிணறு அமைத்து அதில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது கிழக்கு ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரி தண்ணீரும், கிணற்று தண்ணீரும் சமமான நிலையில் உள்ளது. கிணற்றின் சுற்றுச்சுவரில் துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக ஏரி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றுள்ளதாக தெரிகிறது. மேலும் கிணற்று தண்ணீரில் பாசி படர்ந்து நிறம் மாறி உள்ளது.
கோரிக்கை
தற்போதும் இந்த கிணற்றில் இருந்தே மேட்டுச்சேரி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள், நோய்த்தொற்று ஏற்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேறு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story