பொன்னமராவதி அருகே கபடி போட்டி; 43 அணிகள் பங்கேற்பு


பொன்னமராவதி அருகே கபடி போட்டி; 43 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 6:07 AM IST (Updated: 27 Dec 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே கபடி போட்டி நடைபெற்றது. இதில் 43 அணிகள் பங்கேற்றன.

பொன்னமராவதி,

பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகரில் பொன்னை ஜெ.ஜெ. ஸ்ரீ அம்பாள் கபடி குழு சார்பில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 43 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

பரிசு

போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றன. இதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்து 6-ஐ மதுரை செல்லூர் விஜி பிரதர்ஸ் அணியினரும், 2-ம் பரிசு ரூ. 8 ஆயிரத்து 6-ஐ வாதிரிப்பட்டி கபடி குழு அணியினரும், 3-வது பரிசு ரூ.5 ஆயிரத்து 6-ஐ மணல் மேட்டுப்பட்டி இளைஞர்கள் அணியினரும், 4-வது பரிசை அரியூர்பட்டி அதிரடி அம்மன் அணியினரும் பெற்றனர்.

போட்டியை ஜெ.ஜெ. நகர், இந்திரா நகர், கட்டையாண்டிபட்டி, தொட்டியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்னை ஜெ.ஜெ. ஸ்ரீ அம்பாள் கபடி குழு அணி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story