திருமணம் செய்வதாக ஆசை வலை பெண்ணிடம் ரூ.7¾ லட்சம், கார் அபேஸ் - புனேயில் பதுங்கி இருந்தவர் சிக்கினார்
திருமணம் செய்யவதாக ஆசை வலை விரித்து ரூ.7¾ லட்சம் மற்றும் காரை அபேஸ் செய்தவர் புனேயில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்.
தானே,
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து இருந்தார். அப்போது இவரை தொடர்பு கொண்ட 42 வயது நபர் ஒருவர் அப்பெண்ணை திருமணம் செய்ய விருப்புவதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தன்னை அதிகம் படித்தவர் போல் காட்டிக்கொண்டார். நாளடைவில் அப்பெண்ணிடம் பேசி அவரின் நம்பிக்கையை பெற்றார்.
இவ்வாறு திருமண ஆசை வலை விரித்து ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்தை பறித்தார். மேலும் ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள காரையும் எடுத்து சென்றார். இதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண் வசாய்-விரார் போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீலிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அந்த நபர் புனேயில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து கைது செய்தனர். இவர் இதே பாணியில் வேறு பெண்களிடம் மோசடி செய்து உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட இவர் வெறும் பத்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளார் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story