மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் கோவில் இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் கோவில் இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தி.மு.க. மக்கள் கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் இமயநாதன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவி பிரியாபெரியசாமி வரவேற்று பேசினார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சியில் 80 சதவீத மக்கள் கோவில் நிலங்களில் வசிக்கின்றனர். கோவில் நிலத்தில் வசிக்கும் ஏழை மக்கள் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். மன்னம்பந்தல் ஊராட்சியில் அனைத்து தெருக்களுக்கும் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்செல்வன், தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சேயோன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அலெக்சாண்டர், துணை அமைப்பாளர் வக்கீல் சிவதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சியில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தியாகராஜன், சசிகுமார், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.. பன்னீர்செல்வம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குபேரன் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், கடந்த கால தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் பேசினர்.
தொடர்ந்து ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். சமுதாயக் கூடங்கள் அமைத்து தரவேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைப்போல சீர்காழி நகர திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், செல்வ முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகி ஜே.கே செந்தில் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பன்னீர்செல்வம் பேசினார்.
திருவெண்காடு
திருவெண்காடு அருகே நாங்கூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, முன்னாள் கவுன்சிலர் தேவேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள துண்டு ்பிரசுரங்களை ஒன்றிய செயலாளர் சசிகுமார் பொதுமக்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆசிரியர் கோவிந்தசாமி, ஒன்றிய நிர்வாகிகள் பழனிவேல், முத்துக்குமார், முல்லைவேந்தன், ராமதாஸ், ஆசிரியர் ஆறுமுகம், சிவகடாட்சம், நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்தனர். முடிவில் கிளைச் செயலாளர் முத்து நன்றி கூறினார்.
கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பன்னங்குடி ஊராட்சியில் கற்பள்ளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மலர்விழி திருமாவளவன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மணிமாறன், ராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி மாரிமுத்து, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுதா லெலின் வரவேற்றார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அங்குதன், விமலாசுதாகர், வக்கீல் ஸ்டாலின், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லதா சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story